பாகூர் தொகுதிக்கு உட்பட்ட கன்னியகோவில் பச்சைவாழி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் குளம் உள்ளது...

Mar 30, 2023 - 10:30
 0  621

புதுச்சேரி மாநிலம்: பாகூர் தொகுதிக்கு உட்பட்ட கன்னியகோவில் பச்சைவாழி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் குளம் உள்ளது. அதில் கடந்த வருடம் ரூ. 92 ஆயிரம் மீன்பிடிக்கு ஏலம் போனது. இதனை கன்னியகோவில் பகுதியை சேர்ந்த காசிநாதன் என்பவர் ஏலம் எடுத்து அந்த குளத்தில் இருந்த ஆகாயத்தாமரை செடிகளை ரூபாய் 75 ஆயிரம் மதிப்பில்  சரிசெய்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் மீன் குஞ்சுகளை வாங்கி வந்து குளத்தில் விடப்பட்டது.
வருகின்ற சித்திரை மாதம் குளத்தில் உள்ள மீன்களை பிடிக்கும் நிலையில் 600 க்கு மேற்பட்ட மீன்கள் குளத்தில் தூர் நாற்றத்துடன் இறந்த நிலையில் மிதந்தது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும். இந்த சம்பவத்தை காசிநாதன் கோவில் அறங்காவலர் குழு இடம் கூறியபோது அவர்கள் கண்டுகொள்ளாத நிலையில் இறந்த மீன்களை பள்ளம் நோண்டி புதைத்து விட்டனர் வேறு ஏதாவது மர்ம நபர்கள் விஷம் கலந்து இறந்ததா அல்லது வேறு காராணமாக இறந்ததா என தெரியவில்லை. இது சம்பந்தமாக கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில்  காசிநாதன் புகார் அளித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow