புதுச்சேரி கால்நடை துறை மருத்துவர்களால் பரிதாப நிலையில் கால்நடைகள்

Mar 28, 2023 - 17:00
 0  4.1k

புதுச்சேரி நவீன கார்டன் பகுதியை சார்ந்தவர் பொன்னுரங்கம் இவர் 2 மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகின்றார். கடந்த சனிக்கிழமை அன்று மாட்டுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் புதுச்சேரி அரசு கால்நடைத்துறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அங்கு மாட்டை பரிசோதித்த மருத்துவர் மாட்டுக்கு தேவையான மருந்து இங்கு இல்லை நீங்கள் வெளியே சென்று வாங்கி வரவும் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாட்டு உரிமையாளர் ஜயா

நான் ஒரு ஏழை மாட்டிற்கு வைத்தியம் பார்க்க வசதி இல்லாமல் தான் அரசு மருத்துவமனையை தேடி வருகிறோம் நீங்களே மருந்து இல்லை வெளியே சென்று வாங்கி வாருங்கள் என்று கூறுவது சரியில்லை. கடந்த நான்கு நாட்களுக்கு மேல் சிகிச்சை இன்றி பரிதாப நிலையில் மருத்துவமனை வாயிலில் மாடு உண்ண உணவின்றி தண்ணீர் இன்றி தவித்து வருகின்றதுஎன்றார்.இதை கண்டு அருகில் கடை வைத்துள்ள ஒரு பெண் மாடு ஏன் இங்கு இருக்கிறது அதை அழைத்துச் செல்ல வேண்டியது தானே என்று கேட்டதற்கு மருத்துவர்கள் சரியான மருத்துவம் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில்  மாடு மயங்கி உயிர் போகும் நிலையில் உள்ளதால் அதை எடுத்துச் செல்ல வசதியும் இல்லாததால் அங்கேயே அமர்ந்து வேதனையுடன் என்ன செய்ய வந்து என்று புரியாமல் இருந்துள்ளார்.
அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாட்டு உரிமையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று சட்டசபை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மருத்துவர்கள் இது போன்ற செயல்களில் நடைபெறுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. புதுச்சேரி அரசு மானிய விலையில் கால்நடைகள் பராமரிக்கப்படும் என்று ஆடு கோழி மாடுகளை வழங்கி வருகின்றன ஆனால் கால்நடைகளை பராமரிக்க மருந்து மற்றும் உபகரணங்கள் போதிய மருத்துவர்கள் இல்லாதது கால்நடைகளுக்கு பெரும் ஆபத்தானது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow