புதுச்சேரி ஆக்கிரமிப்பு பணியை பார்வையிட சென்றபோது பேராசிரியர் உள்ளிட்ட இரண்டு பேர் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Mar 29, 2023 - 16:25
Mar 29, 2023 - 16:25
 0  837

புதுச்சேரி ஆக்கிரமிப்பு பணியை பார்வையிட சென்றபோது பேராசிரியர் உள்ளிட்ட இரண்டு பேர் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை அடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் வெங்கடேசன். அவர் இன்று திமுக கவுன்சிலர்கள் புவனேஸ்வரி ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமார் மற்றும் பலருடன் சேர்ந்து ஆரோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி இடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார் அதில், கடந்த 19:03,2023-ம் தேதி அன்று கலைவாணர் நகர்  மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் அளித்த ஒரு புகாரின் அடிப்படையில் திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு சொந்தமான 5670சதுரஅடி நிலத்தை பேராசிரியர் டி.சி.மோகன் மற்றும் சசிரேகா என்பவர்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும். அவர்கள் அங்கு கட்டுமான பணிகளை மேற்கொண்டுவருவதாகவும் அதனை தட்டி கேட்க சென்ற ஸ்ரீராம் நகர் குடியிருப்போர் சங்கத்தில் உள்ளவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அதன் காரணமாக மேற்படி சங்கத்தினர் இப்பிரச்சனையை விசாரணை செய்து இடத்தை ஊராட்சிக்கு மீட்டு சமூக நலக்கூடம் மற்றும் நூலகம் அமைத்து தரும்படி புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அங்கு சென்று ஆக்கிரமிப்பு இடத்தை பார்வையிட்ட போது, பேராசிரியர் டி.சிமோகன் மற்றும் சசிரேகா ஆகியோர் புதுச்சேரியில் இருந்து அடியாட்களை அழைத்து வந்து இரும்பு பைப்பு கொண்டு தன்னை தாக்கம் முயற்சித்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொதுமக்கள் திடீரென திரண்டதால் அந்த கும்பல் அங்கிருந்து ஓடி விட்டதாக ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் அந்த புகாரில் கூறியிருந்தார். ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பொழுது திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதாக ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உறுதி அளித்தார். போலீசாரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow