ஜி.என் பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் 18ஆம் ஆண்டு செடல் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது
புதுச்சேரி (RNI) புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், ஜி.என். பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் 18ஆம் ஆண்டு செடல் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக பிரம்மோற்சவ விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கடந்த 19ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மின் அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. மேலும் தினம்தோறும் சுவாமிக்கு அபிஷேக அலங்காரங்கள் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு வந்தது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று செடல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு செடல் செடல் போட்டுக் கொண்டும், அலகு குத்தியும், வேன், கார், தேர் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் செடல் திருவிழாவில் தேர் பவணியில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மதியம் அம்மனுக்கு பாற்சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கூழ் மற்றும் கஞ்சி ஊற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. நடைபெற்ற விழாவில் திரளான பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திருக்கோவில் நிர்வாக அதிகாரி அன்பழகன், உபயதாரர்கள் மற்றும் ஜி.என். பாளையம் கிராமவாசிகள், இளைஞர்கள் வெகு சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X
What's Your Reaction?






